Sunday, May 1, 2016

வாயாடி

வாயாடி பற்றி எழுத சொன்னால் ஒரு வரி,
(சுற்றி) வளைத்து எழுதாமல் இருந்தால் அதுவே சரி.

வாரி வழங்குவாள் அவள் வார்த்தைகளை,
வாயடைத்து போயி பார்ப்பேன் அந்த தவளையை.

வாலிபத்தில் இருக்கும் வஞ்சி வாய் கிழிந்தால்,
வாலிபர் நெருங்கிட நேரி, ஆட்டிடுவார் வால்.
வயதையும் வம்பையும் வட்டத்திற்குள் அடக்கி,
வன்முறையை தூண்டாது அனைவரையும் மடக்கி,
வகுத்து வைத்த பாதையில் அவரை செலுத்தி,
வழி காட்டிடவேண்டும் வாயாடி ஒருத்தி.

வரி ஒன்றை கேட்டால் பத்து கொடுத்தேன்
வாயாடி ஆட்கொண்டதால் வரம்பு மீறினேன்.
வலிமையையும் வள்ளல் குணமும் பெற வாழ்த்திடுவேன்
வார்த்தைகளில் அல்ல, வழி காட்டுவதில், வழி வகுப்பதில், வழியாமல் இருப்பதில்.

No comments:

Post a Comment