Wednesday, August 24, 2016

ஸ்ரீ கிருஷ்ணா

ஸ்ரீ கிருஷ்ணா

பிறவியில் நீ ஒரு கைதி,
பின்பு குறித்தாய் கம்சனுக்கு தேதி.

வளர்கையிலே வஞ்சிகளிடம் நீ கைதி,
வண்ணங்களில் மட்டுமே வாழ்க்கையில்லை என தந்தாய் சேதி.

கல்லிலே செதுக்கப்பட்டு கோயிலுக்குள் நீ ஒரு கைதி,
கட்டுண்டாலும் சுயேச்சையாய் நடத்தினாய் உன் நீதி.

கடைசியாக இந்த பக்தனின் மனதில் நீ ஒரு கைதி,
காண்பது உன் செயல்களை, காணாதது என்னுள் ஒளிஞ்சிருக்கும்  நீ இன்னொரு பாதி.

நாங்கள் யாவரும் சூழ்நிலை கைதி,
நானும் அவ்வண்ணமே, அதே சகதி.

என உணர்த்திய உனக்கு பாடுவேன் அந்தாதி,
என்றுமே நிலைநாட்டு நீதி, தோற்கட்டும் அநீதி.

ஒரு கைப்பிடி அவிலுக்கே இறங்கியது நின் மதி,
ஓராயிரம் செல்வம் தந்து, குசேலனுக்கு கொடுத்தாய் நிம்மதி.

No comments:

Post a Comment