Wednesday, August 24, 2016

ஸ்ரீ கிருஷ்ணா

ஸ்ரீ கிருஷ்ணா

பிறவியில் நீ ஒரு கைதி,
பின்பு குறித்தாய் கம்சனுக்கு தேதி.

வளர்கையிலே வஞ்சிகளிடம் நீ கைதி,
வண்ணங்களில் மட்டுமே வாழ்க்கையில்லை என தந்தாய் சேதி.

கல்லிலே செதுக்கப்பட்டு கோயிலுக்குள் நீ ஒரு கைதி,
கட்டுண்டாலும் சுயேச்சையாய் நடத்தினாய் உன் நீதி.

கடைசியாக இந்த பக்தனின் மனதில் நீ ஒரு கைதி,
காண்பது உன் செயல்களை, காணாதது என்னுள் ஒளிஞ்சிருக்கும்  நீ இன்னொரு பாதி.

நாங்கள் யாவரும் சூழ்நிலை கைதி,
நானும் அவ்வண்ணமே, அதே சகதி.

என உணர்த்திய உனக்கு பாடுவேன் அந்தாதி,
என்றுமே நிலைநாட்டு நீதி, தோற்கட்டும் அநீதி.

ஒரு கைப்பிடி அவிலுக்கே இறங்கியது நின் மதி,
ஓராயிரம் செல்வம் தந்து, குசேலனுக்கு கொடுத்தாய் நிம்மதி.

Monday, May 30, 2016

வரி

வரி எழுதுவோருக்கு விதித்தால் வரி
காணாமல் போயி விடும் கவிஞரின் முகவரி.

அச்சில் வரவில்லை அய்யா என் வரி
அய்யய்யோ விதிக்க வேண்டாம் வரி.

வரிகளை கணக்கிட்டு விதித்தால் வரி
வரிப்பவரு கல்லவா விதிக்க வேண்டும் வரி.

வன்முறையின் வரையறை மீறாத வரை வரி
வன்மையாக கண்டிக்கத வரை வரி
வஞ்சனை செய்யாத வரி,
வஞ்சகப் புகழ்ச்சி இல்லாத வரி.

வரிசையாகக் கை கட்டி நிற்கும் வார்த்தைகள் என் வரியில்,
சீர் வரிசையாக அள்ளி தருவேன் நான் கவிதையை என் விருந்தினருக்கு.
வரிசையாக எத்தனை வரி எடுத்துரைத்தாலும்,
வரி பதிப்பகங்கள் தேடி வருவதில்லையே என் முகவரி?



அழகு

மண்வாசனை மழைக்கழகு,
மதி மயங்கும் மாலை அழகு.
மனைக்கு மன்கையழகு,
மனைவிக்கு மாங்கல்யமஅழகு

செவிக்கிசை அழகு,
செவி சாய்போரின் குணமழகு
செருக்கு செல்வத்திற் கழகு.
செதுக்குவது சிற்பத்திர்கழகு.

வயதுக்கு வழுக்கை அழகு
வாழ்வுக்கு வாய்பழகு
வஞ்சிக்கு வசீகரமஅழகு
வனத்திற்கு விலங்கழகு.

பருவத்தில் பாவை அழகு
பறிக்காத பழம் அழகு.

முயற்சி

இது ஒரு தனி மனிதனின் தணியாத தாகம்.
இது ஒரு கர்மயோகியின் காலை நேர யாகம்.

இன்றாவது அடிக்குமா எனக்கு யோகம்?
இன்று மட்டும் என்ன பிரத்தியேகம்?

இனி வரப்போவது செல்வம் எனக் கரைவது காகம்,
இப்பொழுதெல்லாம் காதில் கேட்பது வசந்த ராகம்.

இன்றைய உலகில் வாய்ப்புகள் அமோகம்,
இன்னமும் வாழ்வின் மேல் வரவில்லையா மோகம்?

இதோ கண்டேன் புன்னகை, மறைந்தது சோகம்
இல்லையா சாதிக்க வேண்டும் என்ற வேகம்?

இங்கு வென்றோர், தோற்றவர் என இரண்டே வர்க்கம்,
இல்லை முயற்சி எடுத்தவர்கள் என்ற மூன்றாவது ரகம்.
பூகம்பம்

வரலாறு காணா பூகம்பம்,
வரலாற்றின் முடிவிற்கு ஆரம்பம்?

வயிற்று பசிக்கு உனக்கு தேவையா உயிர்கள் ஓர் லட்சம் ?
வலப்பக்கம், இடப்பக்கம் எங்கு நோக்கினும் ஒரே அச்சம்.

வளைகுடா கச் பகுதியில் எந்தே உன் ஆக்ரோஷம்?
வரிந்து கட்டிக்கொண்டு கொடுத்தாயே பலருக்கு மோட்சம்.

வற்றியது எங்கள் கண்களா?
வரண்டது எங்கள் நாக்குகளா?
வலியின் வலிமை கண்டோமடா சாமி,
வழிந்தோடி வரும் கண்ணீரைத் தடுக்க வழியைக் காமி.

வசூல் கூட்டுவோம்,
வாரி வாரி வழங்கிடுவோம்,
வாழ்வளிப்போம்,
வழமையை நிலை நாட்டுவோம்.


Sunday, May 29, 2016



The late evening. The walk through a well- lit park. Only you and me and two benches craving for us to sit on either of them. Away from the hustle- bustle of the city and the din of traffic. Searching for light amidst the trees, though it is dark. Though it is artificial. At times, dear, I wonder whether life is all about tranquility and peace? And is it so that such a search is only yielding something artificial and not something that is natural. The shadows cast on the pathway. They reflect our longing to stay closer and not away. Even if it were for a fleeting glance and a moment in romance, is not nature also conniving with us to make this happen. Otherwise, why would it rain like this? Why will the pitch dark of the park and adjoining forest still look bright? Is it because you hold me tight? Or is it that I look attractive in pristine white? I see leaves, yellow, red and blue. I see love in each and every hue. The silence is deafening. It is a sort of frightening. But with you besides me, why should I fear? I think loud "Should we title this picture as walking down our memory lane?"

After you left on your job mission overseas, how many months has it been that we had some quality time like this together ? I just want to be, to be with you and bask in our glory of togetherness. Walking side by side with you, matching step with step and just observing you talk with all excitement, gives me a real high. True, they say, there are pleasures in life that are simple, yet costly. For they cannot be bought. Has one of them not got fulfilled today? And you know why? Because at heart, I sincerely longed for the same. God never lets down anybody's sincere prayer. Believe me.

I know your body might have been elsewhere, but your soul always was with me. I have sole proprietary rights on them. I also think " Do we need an umbrella? Will it not give me a kick to get drenched with my fella, that is you?" You give me the much needed security and warmth. I should thank the umbrella for bringing us close. I seem to be sweating even in this rainy season. Is it my sudden unexpected proximity to you that makes me go cold in a sweat? Why should I fear you, of all you who knows only to comfort me?

I only pray that these walks are more frequent and reassuring the way it is today. I ask not God money, wealth or prosperity. I ask HIM only your company and a long walk in the woods. What better than having a shoulder to cry upon? What better than somebody to confide all your thoughts, fears, joyous moments, agonies, love etc. ?


Friday, May 27, 2016

பழ வியாபாரி

எங்கே அந்த வாழைபழம் விற்கும் வியாபாரி?
என் பழங்கள் மட்டும் விற்று போவதில்லையே என வைப்பானே ஒப்பாரி.

ஏறி விடும் பழ விலைகள் எட்ட முடியாத அம்பாரி,
என்னும் பழம் வாங்குபவர்கள் இவனிடம் மட்டும் வள்ளல் பாரி.

எல்லோரிடமும் கூவிக் கூவி விற்கும் இவனுக்கு இல்லையா கேளிக்கை வரி?
என்றும் ஓரிடம் என்று தங்காத இவனுக்கு எது முகவரி?

என்றுமே தங்கி விடவில்லை பழங்கள் இவனிடம் நாரி,
எல்லா பழங்களும் விற்றிருக்கிறார்கள், விற்காதது நன்னாரி.

என்றோ ஒரு முறை "பந்த்" வந்தால் விழும் கல்வீச்சு மாறி மாறி,
எட்டி உதைப்பார்கள் இவன் வயிற்றில் சரமாரி.

Friday, May 20, 2016

கார்கில்

கடமை வீரர்கள் குவிந்த இடம் கார்கில்
கவலையின்றி வாழ்வது அவர்கள் பொழிந்த கருணை முகில்.
காதில் கேட்டதில்லை வார்த்தை " திகில்",
கண்காணா இடத்திலிருந்த போதிலும் இருக்கிறீர்கள் மனதின் அருகில்.

கடுமையான பனி பிரதேசங்களில்,
காப்பீர்கள் நீங்கள் எங்களை உங்கள் சிறகுகளில்,
கற்பிழக்கும்  பாகிஸ்தானின் "திமிர்" துகில்,
கற்பிபீர்கள் பாடம் அடங்கி போவதில்.

காவி அரசு உசுப்பி விட்டதில்
காண முடிந்தது போர் முகில்
காங்கிரஸ் கூறும் குற்ற சாட்டில்
காண முடிந்தது அரசியல் நெடியதனில்.

காலமே சொல்லும் " பாக்குக்கு" தக்க பதில்,
காலை ஒடித்து வைக்கும் தக்க சமயத்தில்
கவலை படேல் கடமை வீரர்களே நீங்கள் இதில்,
கண் இமைப்பதற்குள் கோட்டினை காப்பதில்,
கண்டம் ஆசியாவில் எங்கள் வாழ்த்துண்டு மனதினில், உதடுகளில்,
கண்டதுண்டமாய் வெட்டினாலும் எங்கள் உதிரத்தில்.

Thursday, May 19, 2016

கந்தன் கருணை

வேல் உண்டு வினையில்லை,
மயில் உண்டு பயமில்லை.
குகன் உண்டு குறையில்லை,
காப்பது உண்டு காக்க வைபதில்லை.

குமரனின் காலடியில் விரிந்த சோலை,
கிரோம்பேட்டை எனும் இந்த பூஞ்சோலை
குதூகலிக்கும் குடும்பங்களின் குவளை
குன்றாத, குறையில்லாத இன்பக்குவியலை.

கவிதையில் இருக்கிறதோ இல்லையோ எதுகை மோனை,
கண்டிப்பாக உண்டு கந்தன் கருணை.
கந்தனுக்கு இருபுறம் வள்ளி தேவயானை
கவின்ஞனுக்கு இருபுறம் கற்பினை கற்பனை.

Wednesday, May 18, 2016

கேரளம்

கடவுள் " அவனின்" திருநாடு,
கேரளம் எனும் பெருநாடு.

கேளிக்கை நீ பெறுவாய் நாடு,
கேட்ட வரமெல்லாம் கிடைக்கும் நன்னாடு.

ஓடிவரும் சிற்றாறுகள், கூடிவரும் குற்றாலங்கள்.
ஒதிவிடும் நிறைவு, குடிபுகாது இங்கு குறைவு.

கேரளமே, உன்னில் எத்தனை எளிமை ?
கேள்வி ஞானம் தானா உனக்கு கொடுப்பது வாடா இளமை.

இதுவா என் முதல் விஜயம் ?
இங்கு அடிக்கடி வருவேன் இனி நிச்சயம்.

என்னுள் கவிஞ்ஞனை தட்டி எழுப்பினாய்,
என்றும் எல்லோர்க்கும் எளிமையும், எல்லை இல்லா மகிழ்ச்சியையும் அளிப்பாய்.

Monday, May 16, 2016

சொக்கலிங்கா

சொல் செயல் திறனெல்லாம் உனக்கு அடிமை,
சொக்கிப் போயி நிற்க வைப்பதோ உன் கடமை.

செருக்குடன் உன்னை தொழுவோரின் மடமை,
செதுக்கி வைப்பதோ உனது இயல்புடமை.

சென்ற இடம் எல்லாம் உன்  மகிமை ,
செப்பிட முடியாது  உன் பெருமை,
செவிகள் போதாத எங்கள் நிலைமை,
செழுமை நடுவில் காணும் போதாமை.

செம்மையான வளர்ச்சிக்கு நீ தாங்கும் தலைமை,
செவ்வனே நீக்கி விடும் எமது அறியாமை,
சொற்றொடர்களில் எனக்கு நீ தந்த வலிமை
சொல்லுக்கடங்க வில்லை இந்த சனிக்கிழமை.

Sunday, May 15, 2016

என்  ராஜ்ஜியம்

என் ராஜ்யத்தில் காரமில்லை, கசப்புமில்லை.
இங்கு இதயத்தில் நல்லெண்ணம் மட்டுமே உண்டு.

என் ராஜ்யத்தில் கசாப்பு கடைகளுமில்லை.
வெட்டுவோரும், "வெட்டி" வேலை செய்பவரும் இங்கு இல்லவே இல்லை.

என் ராஜ்யத்தில் " ஈகோ" இல்லை.
தன்னடக்கமும் அவை அடக்கமும் என் மக்களும் உடன்பிறப்புகள்.

என் ராஜ்ஜியம் பற்பல " சமதுவபுரங்களின்" குடி இடம்.
இங்கு உயர்வு தாழ்வு எதுவுமில்லை.

என் ராஜ்யத்தில் புறத்திலிருந்து தாக்குபவருமில்லை.
எங்கள் புறங்களை அந்தப்புரத்தில் விட்டு விடுகிறோம்.

என் ராஜ்ஜியத்தில் அன்பும் அரவணைப்பும் மட்டுமே உண்டு.
அன்பினால் இணையாத இதயங்கள் எவ்வுலகிலுமில்லை.

Saturday, May 14, 2016

பொங்கல்

கரும்போடும் கனிவோடும் வந்தது பொங்கல்,
கண்முன் நிறுத்தியது பல வண்ணங்கள்.
கவிதைகள் பொங்கின என்னுள் பொங்கலோ பொங்கல்
களைப்பின்றி எழுதிடுவேன் நான் இந்த திங்கள்.

காலையில் கண்டேன் ஏழையின் ஒளிமய கண்கள்,
கசக்கி பிழிந்து அவன் கட்டிய கந்தல்,
கலங்கிய என் மனம் பட்டது பல துன்பங்கள்,
கண்ணா! இன்னும் இருக்கிறார்கள் பல த்ரௌபதிகள்.

காசையும் பதவியும் அனுபவிக்கும் கட்சி மாறிகள்,
கடினங்களும் கண்ணீரையும் காண மாட்டார்கள்.
கடவுளே யன்றி வேறு எவர்கள் எங்கள் துணை வருவார்கள்?




Friday, May 13, 2016

Looks like 1 poem got left out for the count of 14 poems in 14 days in May so far. Hence adding this poem today. Enjoy.


ஏக்கம்

ஏக்கத்தில் நீ தவிக்க,
எதிர்நோக்கி நா தழு தழுக்க,
எங்கிருந்தோ நான் வந்து
எட்டியுனை கட்டியணைக்க.

எஞ்சியதை நீ முடிக்க
எரிமலையாய் காதல் வெடிக்க
எவ்வண்ணம் எடுத்துரைக்க
என்னவளே உன் பேரழகு?

எண்ணமெல்லாம் நீ
என்னுயிரும் நீ
எந்த திசையிலும் நீ
எனை ஆட்கொண்ட தீ.

எப்படியணைப்பேன் உன்னை?
எப்படி அடைவேன் குளிர்ச்சி, கிளர்ச்சி, மகிழ்ச்சி, மறுமலர்ச்சி?
எடுதுரைப்பாய் எள்ளளவேனும்.
எய்ட்ஸ்

ஒருத்தனுக்கு ஒருத்தி ஒசத்தி,
ஒன்றிற்கு மேல் அனால் ஓரகத்தி.

எய்ட்சுக்கு தேவையா அழைப்பு?
எல்லோரின் இறப்பிலே அதற்கு பிழைப்பு.

ஒரு நிமிட சுகம்,
ஓசையின்றி கரையும் பணம்,
ஒவ்வொரு நிமிடமும் நீ பிணம்,
ஒய்வு தரும் உனக்கு மரணம்.

இல்லறத்தின் இனிமையை விட்டு,
இல்லாத இன்பத்திற்காக புறப்பட்டு,
இன்னல்களில் அகப்பட்டு,
இப்படியாவது தேவையா  "கிக்கு இன்ச்டண்டு "?
பல் வைத்தியர்

பல் எனும் கல்லில் உளி வைத்து செடுக்குபவர் இவரோ?
பற்களின் இடுக்குகளில் புகுந்து விளையாடும் " பவரோ"?

அனுமதித்தால் பல்லில் சிலை வடிப்பார் இவர்,
அவதிப்படும் அவனவனுக்கு தான் இடிந்து விழும் சுவர்.

வீட்டில் நுழைவாயில் நிலைப்படி
வாயின் நுழைவாயில் பல் என்பது மேல் சொன்னப்படி,

எல்லோரும் விரும்பும் பற்கள் மாதுளம்,
என் வேண்டுதல் எல்லாம் எல்லோரும் பெற வளம்.

பலர் பணம் பெற்று வாழ்த்துவது " பல்லாண்டு வாழ்க",
பல் வைத்தியரோ வாழ்த்துவது " பல்" ஆண்டு வாழ்க என.




Thursday, May 12, 2016

வயோதிகர்

இவர்களா வயதானவர்கள்?
இல்லை வருங்காலத்தில் என் பிரதிபலிப்புகள்.

வதந்திகளும் வெட்டி பேச்சும் மட்டுமல்ல,
வேதாந்தமும் வேதனைகளும் பகிர்ந்து கொள்ளப் படுகிறது இங்கு.

சிலர் தலையில் நரை, சிலர் தலையில் குறை.
சிலர் நடந்து செல்வது பாதம் இழுக்கும் வரை.

இவர்கள் அனுபவம் நமக்கு தேவை.
இவர்கள் நம் இளமைக்கு கொடுப்பார் சலவை.

நாமெல்லாம் நாடினால் இவர்களின் நலம்,
நாட்டில் தேவைப்படாது முதியோர் இல்லம்.

அணையும் தீபம் சுடர் விட்டு எரியும்.
அணையாது பாவம் அன்பு இவரது யாருக்கு புரியும்? 

Wednesday, May 11, 2016

காலை - நல்ல வேளை

காலையில் கதிரவன் தோற்றம்,
கற்பூரம் ஏற்றப்பட்ட வானம்.
கலைமகள் அறிவு புகட்டும் நேரம்,
கற்பனை பல உதித்திட அஸ்திவாரம்.

காத்திருந்த கண்களும்,
கவிப்பாடத் துடிக்கும் நாவும்,
கதிரவனின் வருகையோடு எழும்.
கம்ப ராமாயணம் பல எழுதும்.

களிப்பாகத் தொடங்கிய கவிதை நடை,
களைப்பாறும் முன்பே அதன் இடை,
கரங்களில் பட்டு காணும் விடை
கட்டித் தங்க மதற்கு என்ன எடை?

காலையில் உதித்து, மாலையில் மறித்து,
காண்போர்க் கெல்லாம் பாடம் கற்பித்து,
கதிரவன் ஆற்றிடும் இந்த அறியத் தொண்டு,
கல்வி போதிப்பவரிடமும் காண்பது உண்டு.

Tuesday, May 10, 2016

ஆத்மா

பிரிவில் தான் சுகமா?
பிரிந்து இணைவதிலா?
பிரிவிற்கும் உறவிற்கும் என்ன உறவு?
சரிவு காணா உறவுகளில் இன்பம் திகட்டிடுமா?

பிரிவிற்கு எங்குமா?
பிரிந்து, சரிந்து, இனைந்து, மகிழ்வது தான் இன்பமா?

இலக்கை அடையும் வரை தான் ஏக்கமா?
இலக்கை அடைந்த பின் தூக்கமா?
புதிய இலக்கை  நோக்கி பயணமா?
புதுமை பித்தன் தான் மனிந்தனின் புனர் ஜென்மமா?

பழையன கழிதலும் புதுவன புகுதலும் தான் வாழ்கையின் வழிமுறையா?
புதுசும் பழசாகி விடும் என்றரிந்துமா?
போலி வாழ்கையின் புதுப்புது அர்த்தங்கள் எவை?
பொலிவூட்டும் " ஆனந்த வாழ்கை" தேடும் ஆத்மாவை.

Monday, May 9, 2016

அம்மா

அன்று எனை நடக்க வைத்தது நல்வழி,
அதனால் தான் நான் இன்று இல்லை ஏமாற்று பேர்வழி,

அனைவரின் பாராட்டுகளுக்கு அவள் தான் காரணம்,
அதனால் தான் மேலும் நலமடைகிறது என் குணம்.

அந்தி சாயும் வேளை எனை எதிர்பார்த்து,
அகத்தினுள் அவஸ்தை பட்டு,
அப்பாவி அவன், ஐயோ என்னாயிற்றோ என்று வேதனைப்பட்டு,
அப்போது திரும்பிய என்னை கவலையும்,
அன்பு கலக்க உள்ளே அழைத்து,
அன்று முதல் இன்று வரை என்றும்
அற்புதக் காட்சி யாக என் இதயத்துள் அச்சடிக்க பட்டிருக்கு.

Sunday, May 8, 2016

சகுனம்

எனை பெற்ற என் அம்மா சகுனம் பார்ப்பதில்லை,
என்னை தான் பூனையாய் மடியில் கட்டி இருக்காளே ?

அன்று பிரசவிக்க ஆஸ்பத்திரி சென்ற போது கருப்பு பூனை குருக்கிட்டதே,
அதை இன்னமும் தேடி திரிகிறேன், திரும்ப இப்படி குறுக்கே போகாத என?

என் எதிர்பார்ப்புகள் எல்லாம் " உடனடி",
என்னை பொறுத்த வரை நான் எப்போதுமே " ரெடி".

அரச மரத்தை சுற்றி வந்து அடி வயிறு தொட்டு பார்க்கும் " டைப்" நான்,
அனைத்திற்கும் சகுனம் பார்ப்பவன் நான்.

சகுனி சகுனம் பார்த்தா பகடை காய் உருட்டினான்?
சகுனதிளிருந்து நற்குணம் மாறிய வரை எங்கு காண்?

Saturday, May 7, 2016

கால்வாய்

சலிக்காமல் சாக்கடையாய் ஓடுகிறதே கால்வாய்,
சடாரென தூக்கி எரிவாறே தவிர எனக்கு தருவாரா "கால்" வாய்?

சனிக்கிழமை தோறும் சுத்திகரிப்பு,
சாலையில் செல்வோருக்கு பரிதவிப்பு.

சகட்டு மேனிக்கு கொட்டுவார் இங்கு குப்பை,
சரிந்து கிடக்கும் தொட்டி, சாய்ந்த தொப்பை.

சுத்தம் கடவுள் தாங்கும் மித்தம்,
சுத்தம் செய் உன் வீடு நித்தம்.

சாக்கடை நாறத்தான் செய்யும் நீ போடும் குப்பையினால்,
சாக்கடை நாரியும் போயிடும் சுத்தம் செய்யாமல் போனால்.

சிறுவருக்கு பயிற்சி அளிப்போம்,
சிறுநீரை வீட்டிலேயே கழிப்போம்.

Friday, May 6, 2016

தவப்பலன்

காலம் நெய்த நூல்,
காலத்தினால் அழியாத நூல்.
ஆயிரங்காலத்து பயிர்,
அவளே என் உயிர்.

தோழமைக்கு ஒரு தோள்,
தோல்விக்கு மறு தோள்,
வெற்றிக்கு பாராட்டு
வெறும் கையினால் முதுகில் ஷொட்டு.

என் இன்பம் தன் இன்பமென
என் துன்பம் தன் துன்பமென,
எண்ணிய மங்கை இவள்,

(எனது ) எத்தனை ஜென்ம தவப்பலனோ?

Wednesday, May 4, 2016

கட்டுப்பாடு

இவர்கள் தெருவோர பார்வையாளர்கள்,
வேடிக்கை பார்பர், வேதனை படமாட்டார்.

இவர்கள் நுனிப்புல் மேய்பவர்கள்,
புல்லின் நுனியையே புல்லாக மேய்ப்பர்.

இவர்கள் தேனிக்கள் அல்ல, தங்கள் கூடு அழிந்தாலும் மற்றவர்களுக்கு தேன் அள்ளி வழங்கிட,
இவர்கள் படாம்பூசிகள், இனிமையான தேனை இவர்களே பருகிட.

இவர்களுக்கு என்று வரும் வேலையில் ஈடுபாடு?
இனியாவது கடை பிடிப்பாரா கட்டுபாடு?

இளமையில் எளிமை தேடும் இதயங்களே,
இமை மூடும் நேரத்திற்குள் வரும் முதுமை என்னும் சத்தியன்களே.

வாட்டர்  டான்கர்

அரைத்து தள்ளும் வேகத்தில் தளும்பியது நுரைத்து தள்ளும் குடிநீர்,
ஆவலுடன் எதிர் பார்த்தும் வரவில்லை மேகத்திலிருந்து ஒரு சொட்டு மழைநீர்.

இவற்றின் பெயர் " வாட்டர் டான்கர்",
இவை வரும் போது கூவுகிறோம் " டேஞ்சர்".

குளிக்க கேட்கவில்லை அய்யா குடம் நிறைய நீர்,
குடிக்கவாவது கொடுங்கள் கருணை காட்டி " நீர்".

வறண்டு விட்டது சென்னை வானம்,
வலிய வந்து பாடுவானா வருணன் இன்றாவது கானம்?

குண்டும் குழியுமாகியது தார் ரோடு?
குறைகளை கூறி முறையிடுவேன் நான் யாரோடு?

Tuesday, May 3, 2016

நாய்க்குட்டி

மழையில் நனைந்த நாய்க்குட்டி,
மல்லாந்து படுப்பது வெகு சுட்டி.

மலரென நனைந்தாயோ?
மழலை பேச நினைத்தாயோ?

மானிடர்களை கண்டு ஒளிந்தாயே,
மனமில்லாதவர்களா நாங்கள்?

மலங்க மலங்க முழிதாயே,
மழையில் காணவில்லையா உன் தாயை?

"மார்னிங்" வேளைக்கு நீ ஒரு ஊக்கம்,
மலர்ந்த மொட்டாய் அளித்தாய் மயக்கம்.

Sunday, May 1, 2016

வாயாடி

வாயாடி பற்றி எழுத சொன்னால் ஒரு வரி,
(சுற்றி) வளைத்து எழுதாமல் இருந்தால் அதுவே சரி.

வாரி வழங்குவாள் அவள் வார்த்தைகளை,
வாயடைத்து போயி பார்ப்பேன் அந்த தவளையை.

வாலிபத்தில் இருக்கும் வஞ்சி வாய் கிழிந்தால்,
வாலிபர் நெருங்கிட நேரி, ஆட்டிடுவார் வால்.
வயதையும் வம்பையும் வட்டத்திற்குள் அடக்கி,
வன்முறையை தூண்டாது அனைவரையும் மடக்கி,
வகுத்து வைத்த பாதையில் அவரை செலுத்தி,
வழி காட்டிடவேண்டும் வாயாடி ஒருத்தி.

வரி ஒன்றை கேட்டால் பத்து கொடுத்தேன்
வாயாடி ஆட்கொண்டதால் வரம்பு மீறினேன்.
வலிமையையும் வள்ளல் குணமும் பெற வாழ்த்திடுவேன்
வார்த்தைகளில் அல்ல, வழி காட்டுவதில், வழி வகுப்பதில், வழியாமல் இருப்பதில்.

Saturday, April 30, 2016

விநாயகர் அகவல்

விநாயகர் அகவல்

அகவலை படித்தேன்,
அகத்தினுள் மகிழ்ந்தேன்.

அல்லல்கள் ஓடிட கண்டேன்,
அல்ல இது உண்மை என்பவரும் நம்பிட கண்டேன்.

அகிலமெல்லாம் உன்னுடன் துவங்கும்,
அகலமான பாதைக்கு உன் துதி வழி காட்டும்.

அம்பிகை மைந்தா,
அருட்கை வேந்தா.

அன்றாட நானுனை பாட,
அருள் புரிந்த நீ கண்ணுக்கு விருந்தா, செவிக்கு விருந்தா?
உள்ளத்தின் மருந்தா?